மதுரையில் மூளைச்சாவு அடைந்த பால்காரரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கான்பாளையத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் சொந்தமாக பால் பண்ணை வைத்து சில்லரை வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் நாகராஜன் மோட்டார்சைக்கிளில் பால் பண்ணையிலிருந்து தனது வீட்டிற்கு அனுப்பானடி அருகே சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த சரக்கு வேன் அவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் நாகராஜனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் குடும்பத்தினர் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். […]
