மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பாலையூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சிவக்குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிவக்குமார் மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
