சீனா-தைவான் இடையிலான பதற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கடந்த 1940-களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டது. அப்போது இருந்து தைவான் தன்னை ஒரு சுதந்திரநாடாக அறிவித்து வருகிறது. அதேநேரம் சீனா அதனை தன் மாகாணமாகப் பார்க்கிறது மற்றும் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக இணைக்கபடும் என்று கூறிவருகிறது. அதன்படி தைவான் மீது சீனாவின் தாக்குதல், அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்துவருகிறது. சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்துள்ளது. பெரும்பாலான நாடுகள் தைவானை சீனாவின் ஒருபகுதியாகவே கருதுகிறது. […]
