உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹதராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் […]
