கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலுள்ள மஹாராஜா பூங்காவில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, ஒருவரை கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்தி சாலையில் பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொடூரமாக தாக்கப்பட்ட அந்த நபர் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மேகராஜ் என்பதும், இவர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் […]
