கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “பாலியல் துன்புறுத்தலில் தற்கொலை செய்து கொண்ட கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் அவர்களை தகாத முறையில் பேசி, சரமாரியாக அடித்துள்ளார். […]
