தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்தியதோடு, வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்மயி குற்றம் சாட்டிய நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் விஜே அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதோடு அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
