பாலின வேறுபாட்டை எதிர்ப்பதற்காக ஆசிரியர்கள் குட்டை பாவாடை அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வெலோடோலிட் என்ற நகரத்தில் இருக்கும் பள்ளியில் பயின்ற மிக்கேல் கோம்ஸ், என்ற 15 வயது மாணவன், கடந்த நவம்பர் மாதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் பாலின வேறுபாடு பார்க்கக் கூடாது என்பதற்காக குட்டை பாவாடை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றிருக்கிறார். எனினும் பள்ளி நிர்வாகம், மனநல மருத்துவரை அணுகி சிறுவனை ஆலோசிக்க வைத்தது. மேலும் பள்ளியிலிருந்தே நீக்கிவிட்டது. […]
