இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலாஜி சக்திவேல். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைத்தது. அதன்பின் கல்லூரி, வழக்கு எண் 18/9 என அடுத்தடுத்து சிறந்த படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் அசுரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல் இன்று உடல் நலக் குறைவு மற்றும் வயது […]
