நாகர்கூடல் அருகில் பாலம் இல்லாததால் இறந்த முதியவரின் உடலுடன் கிராம மக்கள் ஆற்றை நீந்தி கடந்து சென்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் 80க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் நாகாவதி அணைக்கு செல்லும் நீர்வழி பாதையில் பாலம் இல்லாததால் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆத்து கொட்டாய் கிராமத்தில் 80 வயது முதியவர் ஒருவர் இறந்துள்ளார். அவரை கிராம மக்கள் நாகாவதி […]
