சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன […]
