தென்கொரியாவில்சென்ற 2012ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக பார்க் கியுன் ஹை தேர்வு செய்யப்பட்டார். இவரின் நெருக்கமான தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உட்பட பெரும் நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். இச்செயலில் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு நேரடியாக பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அதிபருக்கு எதிராக நாட்டில் பெரியளவில் போராட்டம் வெடித்தது. […]
