வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு விடியலையும் நல்ல மாற்றத்தையும் தரும் என பெரம்பலூர் நாடாளுமன்றம் டாக்டர் பாரிவேந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மற்றும் பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சத்தியநாதன், இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். […]
