பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி வழங்கினார். பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. ஆனால் பாஜக தனியாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடமாக 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் திமுக மட்டும் 23 இடங்களில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. […]
