Categories
சினிமா

ஒரே படத்தில் அடித்தது ஜாக்பாட்…. பிரபல காமெடி நடிகரின் மகளுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் கொட்டாச்சி.இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். தற்போது இவரின் மகளான மானஸ்வியும் சினிமாவில் நுழைந்துள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் மானஸ்வி. இவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.அண்மையில் டெல்லி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட மாமனிதன் படத்தில் மானஸ்வியின் நடிப்பை பார்த்து உடனே […]

Categories
சினிமா

“கோப்ரா” படம்…. நடிப்பில் பிச்சுட்டாரு…. கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்…..!!!!

இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உட்பட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் விக்ரம் ஒவ்வொரு வேடங்களிலும் மிரட்டி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

2022 வருட தேசிய நல்லாசிரியர் விருது… புதுவை அரசு பள்ளி ஆசிரியருக்கு குவிந்து வரும் பாராட்டு…!!!!!

மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலம் வருடம் தோறும் தேசிய நல் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 2022 ஆம் வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களை மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. அதில் புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் உள்ள அர்ச்சன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜாவிற்கு சிறந்த நல்ல ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“தேசிய நல்லாசிரியர் விருது” தமிழகத்தைச் சேர்ந்த 1 ஆசிரியர் தேர்வு…. குவியும் பாராட்டு….!!!!

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது நாடு முழுவதும் உள்ள மொத்தம் 46 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுக்கு 2 மாற்று திறனாளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், 1 ஆசிரியர் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்…. இளைஞர் அசத்தல்….. அப்படி என்ன ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க…..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் என்ற பகுதியை சேர்ந்த பி டெக் பட்டதாரியான ரோகித் சர்மா என்ற இளைஞர், உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,13 அடி நீளம் கொண்ட இந்த எலக்ட்ரிக் பைக் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அதேசமயம் 700 கிலோ எடை இழுக்கும் திறன் கொண்டது. இதற்கு இரண்டு மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 1080 கிலோ மீட்டர் வரை செல்லலாம். இதற்கு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இது வேற லெவல் சாதனை…. குடும்ப பொறுப்புகளை பார்த்துக்கொண்டு டிஎஸ்பி ஆன கான்ஸ்டபிள்….. குவியும் பாராட்டு….!!!

பீகார் மாநிலம் பெகுசார் மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பாப்ளி குமாரி,குடும்ப பொறுப்புகளையும் பார்த்துக்கொண்டு போட்டி தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பயிற்சி மையத்திற்கு செல்வதற்கு முன்பு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இது தொடர்பாக அவர் பேசுகையில், குடும்பத்தின் மூத்த பெண்ணான நான் நிறைய பொறுப்புகளை எடுத்துக் கொண்டேன். அதனால் அரசு வேலை வேண்டுமென முயற்சித்தேன். 2015 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி ஒரு பீல் குட் படம் பார்த்து கொஞ்ச நாள் ஆகிவிட்டது… திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டும் செல்வராகவன்…!!!!!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், பாரதி ராஜ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர்  நடித்து இருக்கின்றார்கள். ரிலீசான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகின்றது இந்த படம். இதனால் திரையரங்குகளில் முதல் நாளை காட்டிலும் அடுத்த நாட்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கஸ்தூரிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மித்ரன் ஜவகர் அவருடைய நான்காவது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறை சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டி…. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு….!!!!

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சூழல் சுற்றுலா மையத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர்கள் பூங்கா, குதிரை சவாரி, ஜிப்லைன், பரிசல் சவாரி போன்றவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளை தற்போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவ்வளவு திறமையா?…. 5 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவன்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் சின்னாங்குப்பம் பகுதியில் குறிஞ்சி மெட்ரிக் என்ற மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 4-ஆம்  வகுப்பு படிக்கும் ஹரேந்திரா என்ற மாணவன் மதுரை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலம்பம் சுற்றும் உலக சாதனை போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். இந்த […]

Categories
உலகசெய்திகள்

“எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது”… இந்தியாவிற்கு பிரபல நாடு பாராட்டு…!!!!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உலகின் பிற எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது என அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை பாராட்டு தெரிவித்துள்ளது. இது பற்றி வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசிஸ் ஜா பேசும் போது, இந்தியாவையும் அமெரிக்காவையும் விட தடுப்பூசி போடுவதற்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் நன்கொடை அளித்த ஆதரவளிப்பதற்கும் தடுப்பூசி போட்டு உலக மக்களை பாதுகாப்பதற்கும் அதிகமாக செய்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள்…. கண் கலங்கிய பொதுமக்கள்‌‌….!!!!

சுதந்திர தின விழாவின் முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…”2 மணி நேரத்தில் பெண்ணாக மாறிய ஆண்”… குவியும் பாராட்டுக்கள்….!!!!!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆன அப்துல் கலாம் உலக சாதனைக்காக ஒப்பனை மாராத்தான் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினமான நேற்று நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரைசிங் ஸ்டார் மற்றும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. 90 ஒப்பனை கலைஞர்கள் பல்வேறு விதமான ஒப்பனை கலைஞர்களுடன் spectacular ramp walk மூலம் அசத்தியுள்ளனர். ஒப்பனை கலைஞர்கள் தங்கள் ஒப்பனை மற்றும் சிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

47 வருட ரஜினிசம்….. குடும்பத்துடன் எளிமையாக கொண்டாடிய ரஜினி….. வைரலாகும் பதிவு…..!!!!

பெருமைமிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு… அவருக்கு பிறந்ததில் பெருமை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன் பின்னர் கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்த மாணவன்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து ஒட்டிய மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிலையில்   10-ஆம்  வகுப்பு படிக்கும் பிரவீன்ஜி என்ற  மாணவன் தினத்தந்தி நாளிதழில் வந்த 75 தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து  பெயர் பலகையில் ஒட்டி காட்சிப்படுத்தியுள்ளார். இந்த செயலை பேரூராட்சி மன்ற தலைவர் கீதா, பள்ளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்பாவை அப்படியே ஃபாலோ பண்ணும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்”… ரசிகர்கள் பாராட்டு…!!!!!

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இதனை கொண்டாடும் விதமாக சுதந்திர தின அமிர்த பெருவிழா என்னும் பெயரில் ஒன்றிய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக இல்லம்தோறும் தேசியக்கொடி என்னும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி வருகிற 13-ஆம் தேதி முதல் சுதந்திர தினமான 15ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் நமது தேசியக்கொடி பட்டொளி வீசி  பறக்க செய்யுமாறு அழைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மனசு தான் சார் கடவுள்”…. தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு கேக் இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேவாரியா என்ற பகுதியில் உள்ள கனக் ஸ்வீட்ஸ் என்ற பேக்கரி கடை உள்ளது.  அங்கு  தாய் தந்தை இல்லாத 14 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு கேக் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் உரிமையாளர், தனது அறிவிப்பில், இலவசம்.. இலவசம்.. தாய், தந்தை இல்லாத 14 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக்குகள் இங்கு இலவசமாக தரப்படும் என எழுதி அறிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை ஐஏஎஸ் அதிகாரி அவனிஸ் சரன் ட்விட்டரில் பகிர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல எழுத்தாளரை தாக்கிய நபரை…. பாராட்டும் ஈரான் பத்திரிக்கைகள்… என்ன காரணம் தெரியுமா?..

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்திய வம்சாவளி எழுத்தாளரை தாக்கிய நபரை ஈரான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. அமெரிக்க நாட்டின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கத்தியால் தாக்கினார். உடனடியாக, அவரை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பேச முடியாமல்  இருக்கிறார். மேலும், அவர் […]

Categories
மாநில செய்திகள்

7 வயதில் உலக சாதனை….. அசத்தும் தமிழக சிறுவன்…. குவியும் பாராட்டு….!!!!

சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு சேர்ந்த யோகா மாஸ்டர் பாபு ரவி என்பவரின் 7 வயது மகன் தர்ஷித், ஓம்கார ஆசனத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.சிறு வயது முதலே மிகவும் கடுமையான ஓம்கார ஆசனத்தில் தர்ஷித் பயிற்சி எடுத்து வந்த நிலையில் நேற்று பூந்தமல்லி அருகே தனியார் மண்டபத்தில் தலையில் கண்ணாடி டம்ளர் வைத்து சுமார் 6.14 நிமிடங்கள் ஓம்கார ஆசனத்தில் அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் […]

Categories
மாநில செய்திகள்

தேசியக்கொடியை போல் அணிவகுத்து….. ஒரே நேரத்தில் 20 ஆயிரம் மாணவர்கள் செய்த உலக சாதனை….. குவியும் பாராட்டு….!!!!

நாட்டின் 75 வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விடுதலை அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 20 ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று திரண்டு கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி ஒரே நேரத்தில் தங்களது செல்போனிலிருந்து சுதந்திர தின வாழ்த்து செய்தியை அனுப்பி உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்வி ஒன்றில் இந்த நிகழ்ச்சியை நடைபெற்று உள்ளது . அங்கு ஒரே சமயத்தில் ஒன்று திரண்ட 20 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முதல் முயற்சியிலேயே டிஎஸ்பி…. சாதித்த சாதனைப் பெண்….. குவியும் பாராட்டு……!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாபட்டியை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் பவானியா. இவர் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார்.கல்லூரி படிப்பையும் அரசு கலை கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தார். இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வில் பயிற்சி மையத்திற்கு செல்லாமலேயே படித்து வென்றார். அதன் பிறகு சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவச பயிற்சி பெற்றார். பின்னர் கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்பில் படித்து […]

Categories
உலக செய்திகள்

BREAKING : காமன்வெல்த் போட்டி….. இந்தியாவுக்கு முதல் பதக்கம்…..!!!!

பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், வெள்ளியுடன் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியது. 2-ம் நாளான இன்று, பளு தூக்குதலில் ஆண்கள் 55 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சங்கேத் சர்கர் மொத்தமாக 248 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். சங்கேத் சர்கரைவிட 1 கிலோ மட்டுமே அதிக எடை தூக்கிய மலேசிய வீரர் இதில் தங்கம் வென்றார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இந்த மனசு தாங்க கடவுள்”…. போலீசரின் மனிதாபிமானம்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!!

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம்  மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள்  குவிந்து வருகின்றது. சென்னை புரசைவாக்க பகுதியில் உடல் முழுவதும் பெயிண்ட் தடவிய நிலையில் ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கை பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்தது இதனை அடுத்து வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு மனிதாபிமான முறையில் அடிப்படையில் அந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவரது பெயர் கருணாகரன் என்பதும் கரும்பு தோட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி….. உயிரைக் காப்பாற்றிய தமிழிசை….. குவியும் பாராட்டு….!!!!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயணித்த விமானத்தில் சக பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவர் ஆவார் . நேற்று வாரணாசியில் இருந்து டெல்லி வழியாக சென்ற இண்டிகோ விமானத்தில் இவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பார்த்திபனின் உலக சாதனை திரைப்படமான “இரவின் நிழல்”…. கடிதம் மூலம் ரஜினிகாந்த் பாராட்டு….!!!!!

பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்பட குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரமான பார்த்திபன் அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இத்திரைப்படம் புதிய சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பார்த்திபன் பல சோதனை படங்களை எடுத்து சாதனை படங்களாக்கி வருகின்றார். இவர் ஒத்த செருப்பு திரைப்படத்தை கையிலெடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் தற்போது இரவின் நிழல் படத்தில் புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

அருணாச்சலப்பிரதேசம்: பாரதியார் பாடலை அருமையாக பாடிய சகோதரிகள்…. பிரதமர் மோடி பாராட்டு…..!!!!

பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியார் பாடலை அருணாச்சலப்பிரதேச சகோதரிகள் பாடியதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த பிரதமர் நரேந்திரேமோடி அவர்களுக்கு தமிழிலேயே பாராட்டு தெரிவித்துள்ளார்.  அருணாச்சலப்பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு தொலைக்காட்சியில் கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” எனும் சுதந்திரப் போராட்ட பாடலை அம்மாநிலத்தின் சகோதரிகள் தமிழில் பாடி அசத்தி இருக்கின்றனர். இதனையடுத்து இந்த சுதந்திரப் போராட்ட பாடலை பாடிய அந்த சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தமிழில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி”…. ரஷ்யாவுடன் கலந்துரையாடல்…!!!!!!!

இலங்கையில் தற்போது நிலவி  வரும் ஏரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் கொள்முதல் தொடர்பாக ரஷ்யாவுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக அந்த நாட்டின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை மந்திரி காஞ்சன விஜய் சேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேகர பொருளாதார நெருக்கடி தொடர்கின்ற நிலையில் எரிபொருட்களுக்கான கடன் வரியை இந்திய அரசாங்கம் வழங்கியமைக்காக பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது, இலங்கையின் எரிபொருள் தேவைக்காக பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ…. ரசிகர்கள் பாராட்டு…. செம வைரல்….!!!

பிரபல நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி வித்தியாசாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்குகள் ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்றது. https://www.instagram.com/p/Cf84_GQPlRc/?utm_source=ig_embed&utm_campaign=loading இந்நிலையில் நடிகை மீனா மற்றும் வித்யாசாகரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அனிரூத் ஒரு ராக் ஸ்டார்” லோகேஷ் படங்களுக்கு நான் எப்போதுமே ரசிகன்…. கே.ஜி.எப் பட இயக்குனர் புகழாரம்…!!!

விக்ரம் படத்தை பிரபல இயக்குனர் பாராட்டியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 440 கோடி வரை வசூல் சாதனை செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த பலரும் விக்ரம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் விக்ரம் படத்தை புகழ்ந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். https://twitter.com/prashanth_neel/status/1546423023787732994 அதில் விக்ரம் பட […]

Categories
மாவட்ட செய்திகள்

“தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை”….. மக்கள் உற்சாக வரவேற்பு…!!!!!

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான 61வது தேசிய சீனியர் தடைகளை சாம்பியன்ஷிப் போட்டி சென்ற மாதம் நடைபெற்றதில் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே இருக்கும் சேத்திரபாலபுரம் விவசாயி இளங்கோவன் என்பவரின் மகள் பரணிகா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதில் பரணிக்கா 4.05 மீட்டர் அளவிற்கு உயரம் தாண்டி புதிய சாதனை படைத்து தேசிய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியை”….. முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு….!!!!!

விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெங்களூருவில் தலைமை இடமாக கொண்டிருக்கும் ஒரு தன்னார்வ அமைப்பின் சார்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், கல்வி பெருவாரியாக சென்றடையாத பகுதிகளில் இருக்கும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு கல்வி குறித்து அறிவியல் ரீதியான விஷயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளி மாணவர்களே ஊக்கப்படுத்த சுற்றுலா பயணமாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்கவிடப்பட்ட கமலின் “விக்ரம்”…. வானதி ஸ்ரீனிவாசன் ட்விட்டரில் பாராட்டு…!!!!!

கமலின் விக்ரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு வானதி சீனிவாசன் ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது. இந்நிலையில் படம் சென்ற ஜூன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வு…. வெற்றி பெற்ற மாணவிகள்…. ஆசிரியர்கள் பாராட்டு…!!!

மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வானது மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், சிவ பிரசன்னா, நிஷாந்தினி, கோகிலவாணி, கயல்விழி, கமலி, ஜோதி ஸ்ரீ, பவதாரணி […]

Categories
உலக செய்திகள்

“பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்ட கரடி குட்டி”… பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவிர்த்த கரடியை வனவிலங்கு உயிரியலாளர்கள் மீட்டு காப்பாற்றியுள்ளனர். ஒரு கரடி குட்டி அதன் தலையை ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் ஜாடிக்குள் விட்டு மாட்டிக்கொண்டுள்ளது. வனவிலங்கு பிரிவு விஞ்ஞானிகளுக்கு கடந்த வாரம் கரடி குட்டி பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக உயிரியல் ஆளர்கள் விரைவாக செயல்பட்டு ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடி  குட்டியை கண்டுபிடித்துள்ளனர். கரடியின் கழுத்தை இறுக்கமாக பொருத்தி இருக்கும் அந்த ஜாடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அட டே சூப்பர்…. “பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் போதும்”…. முக கவசம் வழங்கும் நவீன எந்திரம்….!!!!!!!

ரயில்வே நிலையத்தில் முககவசம் வழங்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் பயணிகள் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் இருந்து தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை  தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர்.இதனால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் முக கவசம் வரும் நவீன இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் குறித்து  […]

Categories
மாநில செய்திகள்

10 வயது பள்ளி மாணவர்….. யோகாவில் உலக சாதனை….. குவியும் பாராட்டுக்கள்….!!!

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10 வயது பள்ளி மாணவர் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் நவநீதம் ஆகியவரின் மகன் ரவி கிருஷ்ணா. இவருக்கு பத்து வயதாகிறது. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். ரவி கிருஷ்ணா தனது இரு கால்களுக்கும் இடையே உடலை முன்னோக்கி வளைத்து பின்புறமாக தலையை மேல் நோக்கிப் பார்க்கும் பாதகுண்டலாசனம் என்ற யோகாசனத்தை ஒரு நிமிடத்தில் 32 முறை செய்து உலக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வெற்றி பெற்ற ஈரோடு இறகு பந்து வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு”….!!!!!

வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்- வீராங்கனைக்கு பாராட்டு. ஈரோடு மாவட்ட இறகுப்பந்து சங்கத் தலைவர் செல்லையன், செயலாளர் சுரேந்திரன், இணை செயலாளர்-பயிற்சியாளர் கே.செந்தில்வேலன் உள்ளிட்டோர் மாநில தரவரிசை போட்டியில் வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்-வீராங்கனைகளை பாராட்டினார்கள்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர்”… குவிந்து வரும் பாராட்டு…!!!!!

கோவை குனியமுத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான் (34). பிளம்பர் ஆக பணியாற்றி வரும் இவர் நேற்று காலையில் வேலைக்காக கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாலாங்குளம் அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்தநிலையில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தனது வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண் பார்வை இழந்த மாணவி… “பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை”… காவல் நிலையத்தில் பாராட்டு விழா…!!!!

கண் பார்வை இழந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றதால் காவல் நிலையத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எல்லைபாறையை சேர்ந்த மாணவி யோகலட்சுமி. இவர் உடல்நலக்குறைவால் கண் பார்வை இழந்தார்‌. இவருக்கு நிதி வழங்கக் கோரி சட்டசபையில் வலியுறுத்தப்பட்டு பின் அமைச்சர்கள் பலர் மாணவியை நேரில் சென்று பார்த்தார்கள். இதையடுத்து மாணவியின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆர்.காந்தி மாணவியின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாகக் கூறினார். […]

Categories
சினிமா

நடிகை சாய்பல்லவியை பாராட்டிய இயக்குனர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பதிவு….!!!!!

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் வருடம் வெளியாகிய “பிரேமம்” திரைப்படம் வாயிலாக மலர் டீச்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய்பல்லவி. இதையடுத்து மலையாளத்திலேயே “களி” என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதன்பின் பிடா என்ற தெலுங்கு படத்தின் வாயிலாக தெலுங்குக்கு சென்ற சாய்பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான தியா திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். அண்மையில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகிய ஷியாம் சிங்காராய் […]

Categories
மாநில செய்திகள்

100/100 மதிப்பெண் பெற்ற மாணவி இவர்தான்….. அதுவும் எந்த பாடத்தில் தெரியுமா?… குவியும் பாராட்டு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த துர்கா என்ற மாணவி பத்தாம் வகுப்பு தமிழ் மொழி பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். தமிழ் மொழி பாடத்தில் அவ்வளவு எளிதில் 100 மதிப்பெண் பெற முடியாது.ஆனால் மாணவர்களால் முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என மாணவி துர்கா நிரூபித்து காட்டியுள்ளார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரின் தந்தை செல்வகுமார் ஆறுமுகநேரி பகுதியில் காவலராக உள்ளார். காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆர்கே பாலாஜியின் வீட்ல விசேஷம்”… திரைப்படத்தின் விமர்சனம் இதோ..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆர்ஜே பாலாஜி. பிஸியான காமெடியனாக இருந்து வந்த பாலாஜி எல்கேஜி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்தார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் நயன்தாரா, ஊர்வசி போன்றோரும் நடித்திருந்தனர். எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிலம்பம் போட்டி…. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை… குவியும் பாராட்டுக்கள்….!!!!!!!

புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மூன்றாவது ஆல் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப்  இந்தியா  அண்ட் – 2022 சார்பில் மூன்று நாட்கள் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி  இந்த கல்லூரியில் இயந்திரவியல் துறை நான்காம் வருட மாணவன் ஆசிக் உடுமன் ஸ்டிக் பென்சிங்  என்னும் சிலம்பம் போட்டியில் 3 தங்கப் […]

Categories
மாநில செய்திகள்

போதைப் பொருள் விழிப்புணர்வு…. இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம்…. குவியும் வாழ்த்து….!!!

இருசக்கர வாகனத்தில் ஒருவர் போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சென்னையில் உள்ள ஷெனாய் நகரத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்திய சமூக சேவை சங்கம் என்ற அமைப்பினை ஆறுமுகம் நடத்தி வருகிறார். இவர் தற்போது போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். இவர் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் இருந்து திருவள்ளுவர் வரை மோட்டார் சைக்கிளில் போதைப்  பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளார். இவர் பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

விஜய் டிவி ராமர் அரசு அதிகாரி…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!!!!

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலமாக மிமிக்கிரி கலைஞராக அறிமுகமானவர் ராமர். இதன்பின் விஜய் டிவியின் பல்வேறு நகைச்சுவை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தனது அபார நடிப்பின் மூலமாக அசத்தி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றார். அதேபோல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மிமிக்ரி செய்து ராமர் பேசிய “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்கிற வசனம் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதன் பலனாக தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார். இன்னும் ஒரு […]

Categories
பல்சுவை

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் CEO…. தமிழ்நாட்டு மாணவர்களை எதற்காக பாராட்டினார்….!!!

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் தமிழ்நாட்டு மாணவர்களை பாராட்டியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 மாணவர்கள் ஐபோன் 13 மினியில் தங்களுடைய சமூகத்தை அழகாக படம் பிடித்து இருக்கின்றனர். இந்நிலையில் அந்த மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் Chennai Photo Biennale அதாவது சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக Chennai Photo Biennale தமிழக மாணவர்களுக்கு A Land of Stories என்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நகையை திருடிய இளம்பெண்… “கையும் களவுமாக பிடித்த பெண் பணியாளர்கள்”…. உதவி கமிஷனர் பாராட்டு….!!!!!

நகை திருடிய பெண்ணை கையும் களவுமாக பிடித்த அந்த ஒப்பந்த பெண் பணியாளர்களை கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் வசித்து வருபவர் நிவேதா. இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்து உள்ளார். இவர் இப்படி சுற்றித் திரிந்ததால் அங்கு பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்கள் நிவேதாவை மடக்கிப் பிடித்து மருத்துவமனையில் உள்ள போலீஸாரிடம் ஒப்படைத்தார்கள். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில் நிவேதா என்ற அந்தப் பெண் பிரசவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் சிக்கிய பயணி…. “விரைந்து சென்று காப்பாற்றிய பெண் போலீஸ்”…. பாராட்டு தெரிவித்த அதிகாரிகள்…!!!

ஓடுகின்ற ரயிலில் சிக்கிய பயணியை காப்பாற்றிய பெண் போலீஸை ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரிகள் பாராட்டினார்கள். சென்னை மாவட்டம், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 24-ம் தேதி ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் இரவு வண்டி எண் 12653 கொண்ட மலைக்கோட்டை ரயில் திருச்சியை நோக்கி நான்காவது நடைமேடையில் இருந்து புறப்பட்டு கொண்டிருந்தபோது, திடீரென்று ரயிலில் பயணித்த 45 வயதுள்ள ஆண் ஒருவர் போகின்ற ரயிலிலிருந்து கீழே தவறி […]

Categories
உலக செய்திகள்

“தன் சொந்த மக்களுக்காக மட்டும் சிந்திக்கும் நாடு இந்தியா…!!” மீண்டும் இந்தியாவை பாராட்டிய இம்ரான்கான்…!!

லாகூரில் நடைபெற்ற பேரணியின்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து பாராட்டியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டுள்ளது. ரஷ்யா மீது அனைத்து நாடுகளும் பொருளாதார தடை விதித்த போதும் அங்கிருந்து துணிச்சலுடன் எரிவாயு இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அனைத்து தரப்பு மக்களையும் நலம் பெறச் செய்யும். ஆனால் பாகிஸ்தானில் அப்படி அல்ல ஒரு சிலர் மட்டுமே வெளியுறவு கொள்கை மூலம் நன்மை அடைகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

“சேப்பாக்கம் MLA-வா மட்டுமில்ல”…. தமிழகத்தின் செல்ல பிள்ளையாக இருந்து…. திட்டங்களை நிறைவேற்றுவேன்….!!!!

சட்டசபையில் இன்று சமூகநலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ உதயநிதி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிக முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் சேப்பாக்கத்திற்குச் செல்ல பிள்ளையாக மட்டுமின்றி தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் “stalin is more dangerous than kalaignar” என பாஜக பிரமுகர் ஒருவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடியான ஆட்டம்…. தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய சுனில் கவாஸ்கர்….!!!

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு (36)வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக் தனது அதிரடியான பேட்டிங் மூலமாக ஆட்டத்தின் போக்கை மாற்றுகின்றார். அவரது வயதை பார்க்காமல் என்ன மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை பாருங்கள். அவருடைய ஆட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆறாவது,ஏழாவது வரிசையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை தற்போது செய்து வருகிறார். எனவே அவருக்கு 20 […]

Categories

Tech |