3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும், கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவதாலும் நாடு முழுவதும் இருக்கும் பாரம்பரிய நினைவிடங்களில் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் குவிந்துள்ளனர். இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 -15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவா் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டு இருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட […]
