விடுதலை போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் கட்டப்பட்ட பாரத மாதா நினைவாலயத்தை மந்திரி மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தமிழக அரசு செய்தித் துறை சார்பில் சுப்பிரமணிய சிவா நினைவிடம் வளாகத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் பாரதமாதா சிலையுடன் கூடிய நினைவாலயம், சுகாதார வளாகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். இந்நிலையில் மந்திரி மு.பெ.சாமிநாதன் விழாவில் […]
