பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் பாரதீய ஜனதா கட்சியினர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் நகர பா.ஜனதா தலைவர் வேம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சர் போன்றோரை அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமராஜா, […]
