பட்டிமன்ற பேச்சில் பிரபலமாக திகழ்ந்தவர் பாரதி பாஸ்கர். அவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பாரதியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.அந்த முயற்சி வெற்றிகரமாக கை கொடுத்ததைத் தொடர்ந்து, டாக்டர்கள் பாரதி பாஸ்கரின் உடலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் விரைவில் குணமடைய வேண்டி, உலகம் முழுவதும் இருக்கும் பாரதியின் ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தினார்கள். […]
