தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா 3 தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரையிலும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு இளையராஜா தன் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில் ”எல்லா வருடங்களும் எனக்கு இந்நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டுபார்த்து நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? […]
