திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க கேரளாவில் பாரதிய ஜனதா தவிர்த்த பிற கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள முதல்வர் பினராய் விஜயன் காணொளி வாயிலாக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைப்பது கேரள மக்களின் விருப்பங்களுக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்து. மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு கேரள முதலமைச்சர் […]
