தபால் அலுவலகத்திற்கு நழைந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே தபால் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம்போல ஊழியர்கள் தபால் அலுவலகத்தை திறந்தனர். அப்போது நாகப்பாம்பு ஒன்று அலுவலகத்திற்குள் பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாகப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். […]
