மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு பாம்பு புற்றுக்கு மேல் காளான்கள் முளைத்து மல்லிகை பூ போன்று காட்சியளிக்கின்றது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் ஒரு சில இடங்களில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு காளான்கள் முளைத்து வருகின்றது. அதன்படி காட்பாடி தாராபடவேடு குறிச்சி நகர் பகுதியில் உள்ள பாம்பு புற்றின் மேல் பகுதியில் காளான்கள் முளைத்து மல்லிகை பூ போன்று காட்சியளிக்கின்றது.
