மலைப்பாம்பை உணவாகப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க நாட்டினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் அதிகமாக பர்மீஸ் ரக மலைப்பாம்புகள் காணப்படுகின்றன. எனவே அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பெரும் அச்சமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் பர்மீஸ் ரக மலைப்பாம்புகளைக் கொல்லலாம் என அந்நாட்டு அரசு உத்தரவு விடுத்துள்ளது. இருப்பினும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதை மனிதர்கள் உணவாகச் சாப்பிட வேண்டும். […]
