கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீம்பதி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மல்லிகா தனது மாட்டு கொட்டகையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த கொடிய விஷமுள்ள பாம்பு மல்லிகாவை கடித்தது. இதனால் மயங்கி விழுந்த மல்லிகாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை […]
