குரங்கு தொல்லையை தடுக்கும் வகையில் போலீஸ் நிலையத்தில் சீன ரப்பர் பாம்புகள் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள கம்பம்மெட்டு காவல் நிலைய பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குரங்கு தொல்லையை தடுக்க ரப்பர் பாம்புகளை பயன்படுத்தும் சீனர்கள் சோதனை வெற்றி பெற்றதால் கம்பம்மெட்டு போலீசாரும் அதே வழியை பின்பற்றி ரப்பர் பாம்புகளை மரக்கிளைகளில் வைத்து நிம்மதி அடைந்துள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து […]
