பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் 8 வயது சிறுமி பாம்புகளுடன் சகஜமாக பழகுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள காட்டாம்பூர் கிராமத்தில் 8 வயதான கஜோல் என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர்களுடைய குடும்பம் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறது. இதன் காரணமாக சிறுமிக்கு பாம்பின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. எனவே சிறுமி பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு பாம்பு பிடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். […]
