ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்றானது மதுரை நோக்கி பாம்பன் பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயன்று பிரேக் பிடித்துள்ளார். அப்போது கன மழையின் காரணமாக பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்து நிற்காமல் இழுத்துச் சென்று எதிராக ராமேஸ்வரம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்து […]
