தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேலம் மாவட்டம் மூன்றாவது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சத்ரிய குமார் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. சத்ரிய குமார் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஓட்டுக்கு யாரும் காசு வாங்க கூடாது என கூறியுள்ளார். […]
