தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவன ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக சுக்விந்தர்சிங் சுகு பொறுப்பேற்றுள்ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதும் பொருளாதார நெருக்கடிகளை பெரிது படுத்தாமல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய அமல்படுத்துவது என்பது சாத்திய மற்றது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்தார்கள். […]
