வட மாவட்டம், தென் மாவட்டம் என வேற்றுமை பார்க்காமல் ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சி அரசின் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.. இந்த கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் அனீஷ் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் பொது மக்களிடம் முக ஸ்டாலின் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை […]
