போலி பான் அட்டையை கண்டறியும் புதிய செயலியை இந்திய வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து, என்ஹேன்ஸ்டு பேன் கியூ ஆர் கோட் ரீடர் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இணைய தகவல் திருட்டு மற்றும் ஆள் மாறாட்டம் போன்ற காரியங்களில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. போலிகளை கண்டறிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. […]
