இணைத்தளத்தில் தினசரி எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், சில வீடியோக்கள்தான் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. அதிலும் குறிப்பாக யானைகள் குறும்புசெய்யும் வீடியோக்களானது எளிதில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு யானை பானிபூரியை மிகவும் ரசித்து சாப்பிடும் வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அசாமின் தேஜ்பூரிலுள்ள ஒரு சாலை ஓர கடையில் யானை ஒன்று பானிபூரியை ரசித்து சாப்பிடுவதைக் காணலாம். சிற்றுண்டியைத் தயாரித்து விற்கக்கூடிய அந்த விற்பனையாளரும் யானைக்கு அதை ஊட்டி விடுவதில் […]
