உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதியை உக்ரைனிய படைகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் தென்கிழக்கு பகுதியான மரியுபோல் மீது உக்ரேனிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ சார்பு அதிகாரி சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]
