ஆப்பிரிக்க நாட்டு உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தவரை அங்குள்ள சிங்கம் ஒன்று கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் அந்நாட்டின் தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. நேற்று முன்தினம் (29-08-2022) வழக்கம் போல் இந்த உயிரியல் பூங்காவுக்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் அங்கு பாரமரிக்கப்பட்டு வரும் விலங்குகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். […]
