திருப்பூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவர் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரியை, அவரைவிட 17 வயது மூத்தவரான தாய்மாமன் முத்துலிங்கம் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற மொசக்குடிக்கு காயத்ரியை அழைத்துச் சென்ற உறவினர்கள் […]
