பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் லோரலை மாவட்டத்தில் கோஹர் அணை என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இவ்வாறு இருவருக்கும் இடையே […]
