தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உலகப்புகழ் வாய்ந்த தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறில் உள்ளது. இக்கோயில், புதுச்சேரி மாவட்டத்திலுள்ள யூனியன் பிரதேசத்தால் இயங்கப்படுகிறது. சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருவது இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமைகளில் தரிசனத்திற்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். இதே போல் சனிப்பெயர்ச்சிகளிலும் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வகையில், […]
