இலங்கையில் தனிநபர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் தொடர்ந்து போராட்டம் வெடித்து வருகின்றது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீடுகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்துள்ளனர். […]
