அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துள்ள அவர் சுதந்திர தினத்துக்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை தொடர இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு சுற்றுப் பயணத்தின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த அதிமுக வக்கீல் ஏ.பி.மணிகண்டன், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், […]
