பாதுகாப்பு கேட்டு சுயேச்சை வேட்பாளர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சாயல்குடி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் சுயேச்சை வேட்பாளராக சரவணமூர்த்தி (வயது 52) என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சாயல்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி சரவணமூர்த்தி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அறிந்த கீழக்கரை துணை சூப்பிரண்டு அதிகாரி […]
