திருநெல்வேலியில் சோதனைச்சாவடியில் பணி செய்து வரும் காவல்துறையினருக்கு கொரோனாவை தடுப்பதற்கான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 30 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு சுழற்சிமுறையில் காவல்துறையினர் பணி செய்து வருகின்றனர். அவ்வாறு பணியாற்றும் காவல் துறையினருக்கு பாளையங்கோட்டை வேளாங்கண்ணி மருத்துவமனை சார்பாக சானிடைசர், முக கவசம், கொசு ஒழிக்கும் மட்டை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் நிகழ்ச்சி நெல்லை […]
