அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த விடாமல் ஒரு வருடத்திற்கு மேல் நீட்டிக்க விரும்புகிறது என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்கய் ஷோய்கு, உக்ரைன் நாட்டில் இறுதி மனிதர் போரில் செத்து மடியும் வரைக்கும் ஆயுதங்களை அளிப்பதற்கு பல மில்லியன் டாலர்கள் வழங்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டிற்கு 800 மில்லியன் டாலர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பாதுகாப்பு நிதியாக வழங்கியுள்ளதாக கடந்த வாரத்தில் […]
