கிழக்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வாகாமா பகுதியில் இன்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, இந்த பயங்கரவாதிகள் இருவரும் 5 வயது சிறுவன் மற்றும் ஒரு சிஆர்பிஎப் படை வீரரை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் டோடாவில் வசிக்கும் மசூத் அஹ்மத் பட் என அடையாளம் காணப்பட்டார். இவர், கடைசியாக எஞ்சியிருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி என்று அழைக்கப்படுபவர். மேலும் ஒரு பாயங்கரவாதியை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட […]
