கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது. அதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கொரோனா பிடியில் இருந்து அதிவிரைவாக மீண்டு வரும் மாநிலம் என்றால் […]
