சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஆண்கள் 427 பேர், பெண்கள் 288 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 திருநங்கைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
