விவசாயிகளை பாதிக்கக்கூடிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்சார திருத்த சட்டம் 2021ன் சாரமானது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும். வேளாண்மைக்கு வழங்கும் கட்டணமில்லா மின்சாரத்தை பறிக்கும், வீடுகளுக்கும், வேளாண்மைக்கும் , வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் கொடுப்பதையும், அதற்குக் கட்டணம் முடிவு செய்வதையும் தனியாரிடம் ஒப்படைக்க இந்த மின்சாரத் திருத்தச் சட்டம் வழி வகுக்கிறது. இந்த சட்டத் […]
