மயிலாடுதுறையில் சாலைகளில் குளம்போல் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டம் 2007-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப் படாததால் ஆங்காங்கே குழாய்கள் வெடித்து பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதில் ஆரோக்கியநாதபுரத்திற்கு பிரிந்து செல்லும் சாலையில் அதிக அளவு சாக்கடை […]
