Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாதயாத்திரையை தடுக்க இது புது பிளான்…. பாஜகவுக்கு பயம் வந்துட்டு…. விமர்சித்த ராகுல்…!!!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொரோனாவால் பாதயாத்திரையை ஒத்தி வையுங்கள் (அ) கொரோனா நெறிமுறைகளை பின்பற்றும்படி ராகுலுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ராகுல், யாத்திரை பயணத்தை நிறுத்த பாஜக அரசு கோவிட் என்ற புதிய யோசனையை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மத்தியபிரதேசத்தில் பேசிய அவர், தனது நடைபயணத்தை நிறுத்துவதற்கான சாக்கு இது. இந்தியாவின் உண்மையை கண்டு பாஜகவினர் பயப்படுகிறார்கள். இது கொரோனாவுக்காக அல்ல, பாதயாத்திரையை நிறுத்துவதற்கு அவர்கள் கண்டுபிடித்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“பாரத் ஜோடாவை நிறுத்துங்க”…. ராகுல் காந்தியை விளாசிய மத்திய மந்திரி…. அனல் பறக்கும் அரசியல் களம்….!!!!

உலகை ஆட்டி படைக்கும் கொரோனா தொற்றானது சீனாவில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். அதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்திக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

“எம்பி ராகுல் பாத யாத்திரையில் சலசலப்பு”…. போலீசார் தள்ளியதில் முன்னாள் அமைச்சர் பலத்த காயம்….. பரபரப்பு….!!!!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடை பயணத்தை பாரத் ஜோடா என்ற பெயரில் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தன்னுடைய நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முடித்து தற்போது தெலுங்கானாவில் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரையானது தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை நெருங்கும் நிலையில், அம்மாநில மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிதின் ரௌத் ராகுலுடன் தெலுங்கானாவில் இருந்தே நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பாதயாத்திரையின் […]

Categories
தேசிய செய்திகள்

எங்க அம்மா அனுப்புனாங்க!…. ஆனா நான் யூஸ் பண்ணல!…. ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நாடு முழுதும் ஒற்றுமை நடைப்பயணம்  மேற்கொண்டு வருகிறார். இப்போது கர்நாடகத்தில் முகாமிட்டுள்ள அவர் அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நடைப்பயணத்தின் இடையில் ஓய்வின் போது ராகுல்காந்தி, தன்னுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் மக்களுடன் உரையாடி வருகிறார். அந்த அடிப்படையில் அவர் மக்களுடன் பேசும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மக்களுடன் உரையாடும் போது ஒருவர் ராகுலிடம், “நீங்கள் எந்த சன்ஸ்க்ரீனை பயன்படுத்துகிறீர்கள்..? என்று கேட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

பாதயாத்திரையை நிறுத்திட்டு அங்கே போங்க!…. ராகுல் காந்திக்கு அட்வைஸ் பண்ண காங்கிரஸ் தலைவர்…..!!!!

இந்திய ஒற்றுமைப் பயணம் எனும் பெயரில் ராகுல்காந்தி நாடு முழுதும் பாத யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். கன்னியாகுமரியில் துவங்கிய ராகுலின் பாதயாத்திரை இப்போது ஆந்திரா சென்றுள்ளது. காஷ்மீர் வரையிலும் பாத யாத்திரையாக ராகுல் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அதாவது, 150 தினங்கள் மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் 3,570- கி.மீ தூரம் நடந்தே சென்று காஷ்மீரில் தன் நடைபயணத்தை நிறைவுசெய்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தி தன் பாரத் ஜோடா யாத்திரையை நிறுத்திவிட்டு தேர்தல் நடைபெறவுள்ள இமாசலபிரதேசம் மற்றும் குஜராத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் நடைபயணம்: “குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர்”…. இது உண்மையில்லை…. -ஜெய்ராம் ரமேஷ்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின்போது குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதன் வாயிலாக காங்கிரஸ் சட்டத்தை மீறுகிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை குழந்தைகள் உரிமை அமைப்பு கேட்டுக்கொண்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெய்ராம் ரமேஷ், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ள புகாரை “முழு […]

Categories
தேசிய செய்திகள்

“கைகோர்த்து நடத்தல், ஜாலியான உரையாடல், தடபுடலான விருந்து” ராகுல் காந்தியை வியக்க வைத்த கேரள மக்கள்….!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 3500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக கடப்பதற்கு திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மத்தியில் 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகி விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறி மாற்று கட்சிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க… தமிழகத்திலிருந்து ஆன்மீக பாதயாத்திரையை தொடர்ந்த பக்தர்கள்…!!!!!

புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறக்கின்றது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு செல்வது வழக்கமாகும். இந்த நிலையில்  பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக பயணம் மேற்கொள்கின்றார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு இருந்ததால் திருப்பதிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் இதனை முன்னிட்டு திருவண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

“4-ம்‌ நாள்‌ நடைப்பயணம்” 1000 மீட்டர் நீளமுடைய தேசிய கொடியை ஏந்திய தொண்டர்கள்….. ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு….!!!!

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் 3250 கிலோமீட்டர் தூரம் நடந்து 150 நாட்களுக்கு பாதையாத்திரை செல்ல இருக்கிறார். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கிய நடைபயணத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு செல்கிறார். அதன்பின் கேரளாவில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…. ‘200 நாட்கள்” பாதயாத்திரையாக வந்த வாலிபர்….!!

வாலிபர் ஒருவர் பாதயாத்திரையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் ஓம்கார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். இவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நடந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 200 நாட்கள் நடந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். இவர் இந்தியாவில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை நடந்தே சென்று தெரிந்துகொண்டு அதை கட்டுரையாக வெளியிட வேண்டும். இதற்காக பாதையாத்திரை மேற்கொண்டதாக கூறினார்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள்…. நொடிப்பொழுதில் நேர்ந்த துயரம்…. பறிபோன 2 உயிர்…. சோகம்….!!!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் பாதயாத்திரை சென்ற திருநாவுக்கரசு, சேகர் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பெண் பக்தர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடக்கடவுளே!”…. இப்படியா பண்ணுவீங்க?…. காங்கிரஸ் கட்சியின் செயலால்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட பல ஆண்டுகளாக கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ‘விரைவில் மேகதாது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும்’ என்று கூறி பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி பாதயாத்திரையை தொடங்கியதால் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் காங்கிரஸ் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மாவோட கோவில் திறந்தாச்சு…. பாதயாத்திரை புறப்பட்ட அதிமுக பிரமுகர்கள்….!!

ஜெயலலிதாவின் கோவிலுக்கு அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளனர். வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தனது சொந்த செலவில் நினைவு திருக்கோவிலை கட்டியுள்ளார். நாளை இக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்காக பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் காப்புக்கட்டி விரதம் இருந்து […]

Categories

Tech |