விழுப்புரம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு உதவி திட்டங்களை வழங்கியதோடு, ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1992-93 வருடங்களில் படித்த மாணவர்கள் தற்போது துபாய் மற்றும் இலங்கை என்று பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு […]
